நாங்கள் யார்
தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் ஒத்த சிந்தனையிலுள்ள ஒரு குழுவால் இலாப நோக்கமில்லாமல் உருவாக்கப்பட்டதுதான் யாழ் கல்வியகம். இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் யாவரும் தன்னார்வர்களே. அவர்கள் யாரும் சன்மானம் எதுவும் பெறுவதில்லை. முற்றிலும் தமிழ் மீதுள்ள பற்றினால் ஆசிரியப் பணி் என்ற புனிதப் பணியை செய்கிறார்கள் எங்களிடம் 40 ஆசிரியர்கள் அமீரகத்திலும் 2 ஆசிரியர்கள் தமிழகத்திலிருந்தும் கற்பிக்கிறார்கள்.